டெல்லியை திணறடித்த சமூக நீதிப் படை
தமிழக முஸ்லிம்களின் இதயத் துடிப்பாக, ரத்த ஓட்டமாகத் திகழும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த 12 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வீரியமிகு போராட்டங்களை நடத்தி வருகிறது.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் கடினமாக பணியாற்றிய இந்த சேவைப் படையினர் தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி விட்டனர்.
தளராத உழைப்பு, சலிக்காத தொண்டுள்ளம் கொண்ட தமுமுக தனது சேவைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், உலகிலேயே முஸ்லிம்கள் இரண்டாவதாக அதிகம் வாழும் இந்தியத் திருநாட்டில் வாழ்ந்துவரும் முஸ்லிம்களின் அவலநிலை குறித்தும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வது குறித்தும் தமுமுக சிந்தித்தது.
தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பேரியக்கமாய் விளங்கி வந்த தமுமுக முதன்முறையாக அகில இந்திய அளவில் தனது பார்வையை அழுத்தமாய் பதித்தது.
அனைத்து இந்திய முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காகவும், அவர்களின் உரிமைகளைப் பேணவும் தமுமுக களம் காண முடிவு செய்தது.
2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இந்திய முஸ்லிம்களிடம் முக்கிய வாக்குறுதிகளை வழங்கி வாக்கு கேட்டது.
அதில் ஒன்று கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் தனி இடஒதுக்கீடு உரிமையை அனைத்து மாநில முஸ்லிம்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி வாக்குறுதி வழங்கியது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வாக்குறுதிகளில் வலு இருந்ததால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெற்றிக்கு இந்திய முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளை பெருவாரியாக வழங்க, காங்கிரஸ் தலைமையிலான திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைத்தது.
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு குறித்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆறு மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மூன்று வருடங்கள் கடந்து விட்டன. முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்து ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது ஆய்வினை முடிக்கவும் இல்லை, தனது முடிவினை அறிவிக்க வும் இல்லை.
முஸ்லிம்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜேந்திர சச்சார் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவினை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்தார். நாடெங்கும் ஆய்வு செய்து சச்சார் குழு வெளியிட்ட அறிக்கை அணுகுண்டுகளாய் இந்திய அரசியல் அரங்கில் வெடித்தது.
ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு மேலாய் இந்தியத் திருநாட்டை திறம்பட நிர்வகித்த இந்த திருச்சமூகம் இன்று பின்தங்கியவர்களிலும் பின்தங்கியோராய் வாழ்ந்து வருவதாக அபாய அறிக்கை வாசித்தது.
கார்கில் முதல் கன்னியாகுமரி வரை வாழும் முஸ்லிம்களின் அவலநிலை இதுதான் என சச்சார் குழு அறைந்து சொல்லி அவலங்களை வெளிச்சப்படுத்திய போது, முஸ்லிம்கள் குறித்து ஆதிக்க சக்திகள் அதுவரை பரப்பிய கற்பிதங்களும் கட்டுக்கதைகளும் அம்பலத்துக்கு வந்தன.
அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் முஸ்லிம்களின் குறைந்த பிரதிநிதித் துவம் குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். வளர்ச்சியின் கனிகள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டும். வளங்களிலும், நலன்களிலும் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார்.
சிறுபான்மையினரின் 15 அம்சத் திட்டமும் பரபரப்பாய் அறிவிக்கப்பட்டன. வசீகர வார்த்தைகள் வாட்டத்தைப் போக்குமா? தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும். பசித்த வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். உரிமை இழந்தவர்களுக்கு உரிமை வேண்டும்.
அறுபதாண்டுகளுக்கு மேலாக வறண்ட பாலைவனப் பயணத்தை மேற்கொண் டிருந்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் உரிமை காக்க உத்வேகம் கொண்ட தமுமுக, களமிறங்கியது. மார்ச் 7, 2007 அன்று தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தது.
தமுமுக தலைமை நிர்வாகிகள் அகில இந்திய அளவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களை ஒருங்கிணைத்தனர்.
இதற்கு முன்பாக 2004 டிசம்பர் 6 அன்று தலைநகர் டெல்லியில் தமுமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்விளைவாக ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தப்பிவிட முயன்ற பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டனர்.
இப்போது அகில இந்திய அளவில் இடஒதுக்கீட்டுக்கான போராட்டக் களம் அமைத்து தமிழகத்தின் அனைத்து முஸ்லிம்களுக்கும் தமுமுக அழைப்பு விடுத்தது.
தன்னலமற்ற சேவைகளால் மக்களின் மனதில் இடம்பிடித்த, சரித்திரத்தில் தடம் பதித்த தமுமுகவின் அழைப்பினை ஏற்று தமிழக முஸ்லிம்கள் அணியணியாய் திரண்டனர்.
தமிழக முஸ்லிம் தெருக்களெல்லாம் டெல்லியை நோக்கித் திரும்பின. போராட்டம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்தே ஓய்வு உறக்கம் அறியாது தமுமுக தொண்டர் கள் களப்பணியாற்றினர். மாநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தமுமுக சேவைப் படையினரின் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டது.
தலைநகர் டெல்லி செல்லும் ரயில்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைக் கொடிகளை ஏந்தி தமிழ் மணம் கமழ சென்றன.
தமிழகம் டெல்லியை நோக்கி இடம்பெயர்ந்ததோ என ஆச்சரியம் மேலிட டெல்லி ரயில் நிலையம் சமுதாயச் சொந்தங்களால் திக்குமுக்காடியது.
எல்லாம் வல்ல இறைவனின் துணை கொண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்தே தமிழக முஸ்லிம்கள் தலைநகர் படையெடுப்பை நடத்தினர்.
தலைநகர் வந்திறங்கிய தமிழக முஸ்லிம்களை தமுமுக தன்னார்வத் தொண்டர்கள் டெல்லி ரயில் நிலையத்தில் முகமலர்ச்சியுடன் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தமிழகத்திலிருந்து டெல்லி செல்லும் அனைத்து ரயில்களும் உரிமைப் போராளிகளை சுமந்து வந்தவண்ணம் டெல்லி மாநகரை வந்தடைந்தன. அனைத்து சகோதரர்களுக்கும் கனிவான வரவேற்பு வழங்கப்பட்டது.
அரசியல் கட்சிகளுக்காக கோஷங்கள் எழுப்ப, அரசியல்வாதிகளின் பணத்தில் டெல்லி செல்பவர்கள் உண்டு. ஆனால் இவர்கள் உரிமைப் போராளிகள்.
எந்த அரசியல்வாதிக்காகவும் கோஷம் போட அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல. தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டே களம் காண வலம் வருகிறார்கள். ஆயிரம் அலுவல்கள், அடுக்கடுக்கான பணிப்பளுக்கள் என குடும்பத்தோடு நேரம் கழிக்க நேரம் இல்லாது தவிக்கும் இவர்கள்தான் உரிமைகளை வென்றெடுக்க டெல்லி வந்திருக்கிறார்கள். அந்த உணர்வு அவர்களிடம் வெளிப்பட்டது.
அம்பேத்கர் பவன். சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்களின் சரணாலயம். ஆயிரக் கணக்கான மக்கள் தங்கும் வசதி இங்குண்டு. ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்கும் வண்ணம் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கும் இங்குண்டு. பிரம்மாண்ட உணவு உபசரிப்பு அரங்கம், திமிறித்திரளும் தமிழக மற்றும் பிற மாநில சகோதரர்களுக்கும் அறுசுவை உணவு படைத்து அலுக்காமல் உபசரித்தது.
மார்ச் 6ஆம் தேதி டெல்லி மாநகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜும்மா மஸ்ஜித் முன்பாக உள்ளூர் மக்களின் சார்பாக தமுமுக தலைமையில் டெல்லி பேரணிக்கு ஆதரவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பங்கேற்றார். தலைமைக்கழகப் பேச்சாளர் நவ்ஷாத் அவர்கள் உர்துவில் பேரணியை விளக்கிப் பேசினார்.
2007 மார்ச் 7ஆம் தேதி புதன்கிழமை. அதிகாலை தொழுகைக்குப் பிறகு பேரணி புறப்பாட்டுக்கான பணிகள் துவங்கின.
எறும்புகளும், தேனீக்களும் வெட்கப்படும் வண்ணம் தமுமுக தொண்டர்கள் பம்பரமாய் சுற்றிச் சுழன்றனர்.
இந்திய முஸ்லிம்களது வரலாற்றின் சிறப்புமிகு மற்றொரு அத்தியாயம் அன்று தான் தொடங்கியது.
குளிரில் வெடவெடத்துக் கொண்டிருந்த டெல்லி மாநகர சாலைகள் உரிமைப் போராளிகளின் உணர்ச்சி கோஷங்களை கேட்கத் தயாரானது. 7 மணிக்கு அணிவகுப்பு ஆரம்பமானது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேரணி துவங்க இருக்கும் ராம்லீலா மைதானம் நோக்கி அணிவகுத்து வாகனங் களில் புறப்பட்டனர்.
வாகனங்களெல்லாம் கறுப்பு வெள்ளை இரு வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.
தாய்மார்கள், குழந்தைகள், பெரியவர்கள், சிறுவர் சிறுமியர் என அனைவரும் புத்தெழுச்சியுடன் புறப்பட்ட காட்சி காண்பவர்களை நெகிழ வைத்தது.
கர்நாடகாவிலிருந்து ஃஙஙப, மகாராஷ்ட்ராவிலிருந்து ஙடஓ, கேரளாவிலிருந்து டஉடயைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கட்டுக்கோப்புக் குலையாத கண்ணியக் கூட்டம். கட்டுக்கோப்பை கட்டிக் காக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர் படையினரின் செயல் நேர்த்தியைக் காண முடிந்தது. எங்கள் இதயங்கள் உறுதியானவை. நாளைய தலைமுறையின் வாழ்வுரிமையை உறுதி செய்ய புறப்பட்டுவிட்ட, மனதால் உரமுற்ற வீரச் சகோதரர்களும் விரைந்தனர் ராம்லீலா மைதானம் நோக்கி.
சமுதாய உணர்வு என்ற மின்சாரம் பாய்ச்சப்பட்ட கழக அடலேறுகள் ஆர்த் தெழுந்து வரும் காட்சியை நாம் பார்க்கிறோம். இன்றைய இளைஞர் பட்டாளத் தின் உரிமைப் போர் வெற்றியின் விளைவாக இன்ஷாஅல்லாஹ் உரிமைகளை அனுபவிக்கப் போகும் நாளைய தலைமுறையினர், அணிவகுத்து வரும் கழகக் கண்மணிகள் வாகனங்களில் ஏறுகின்றனர். தமிழகத்திலிருந்து வந்த உரிமைப் போராளிகளை சுமந்து கொண்டு அணிஅணியாய் வாகனங்கள் ராம்லீலா மைதானத்தை நோக்கி சீறின.
பேரணி துவங்குவதற்கு முன்பாக பேரணியை துவக்கி வைக்குமாறு இந்தியாவின் முக்கிய முஸ்லிம் கேந்திரமான ஃபத்தேஹ்பூர் மஸ்ஜிதின் இமாம் முஃப்தி முகர்ரம் அழைக்கப்படுகிறார். முஃப்தி முகர்ரம் அவர்கள் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இந்தியத் தலைநகரின் ராம்லீலா மைதானம் தமுமுக தொண்டரணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
மாவட்ட வாரியாக தமுமுக தொண்டர்கள் அணிவகுத்து உரிமைப் போராட்டத் துக்கு புறப்படத் தயாராயினர். தொண்டரணியினரின் அணிவகுப்புடன் பேரணி புறப்படத் துவங்கியது.
டெல்லி வாழ் மக்களுக்கு இது ஓர் புதுமையான அனுபவம். ஏன் அகில இந்திய ஊடகத்துறையினருக்கும் இது வியப்பூட்டும் பேரணியாக அமைந்திருந்தது.
இந்திய ராணுவ தரைப்படையினரின் அணிவகுப்பை பார்த்திருக்கிறார்கள். வெள்ளுடை அணிந்த இந்திய வான்படையினரின் அணிவகுப்பையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆகாய வண்ணத்தில் சீருடை அணிந்து அணிவகுத்து வரும் இந்தியக் கடற்படையின் அணிவகுப்பையும் பார்த்திருக்கிறார்கள்.
முதன்முறையாக கோவை மாவட்ட தொண்டரணியினர் கறுப்பு வெள்ளை சீருடையுடன் மிடுக்குடன் நடைபோட்ட சமூக நீதிப் படையை முதன்முதலாக டெல்லி மாநகரம் பார்த்தது.
மண்டல் கமிஷனை எதிர்த்து போர்ப் பிரகடனம் செய்த ஆதிக்க சாதியின மாணவர்கள் ஆட்டம் போட்ட அதே டெல்லியில் சமூக நீதிக்காக சமர் புரிந்தனர் சமுதாய சகோதரர்கள்.
டெல்லி லி ஒரு தந்திர பூமி, இந்திர பூமி, மந்திர பூமி என பல்வேறு அரசியல் ஆய்வாளர்களும், ஏராளமான விளக்க உரைகளால் பட்டங்களால் சுட்டிக் காட்டப்பட்ட டெல்லி மாநகரில் தமுமுக நடத்திய பேரணி இதுவரை கூறப்பட்டு வந்த அரசியல் கணக்குகளை மாற்றிப் போட்டது.
சமூக நீதிக்காக உள்ளூர்களில் உணர்ச்சிகரமாக முழங்கியவர்கள் டெல்லியில் சற்று தள்ளியே நிற்க வேண்டிய நிலையில் தமுமுக தனது வீரியமிக்க பேரணியின் மூலம் சமுதாய மக்களைத் திரட்டி சமூக நீதி தளத்தில் இந்திய பூபாகத்தின் முதல் நிலை சக்தி என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது.
தமிழகத்தில் மட்டுமே தனது நலப் பணிகளை உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்திருந்த தமுமுக, அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்காக தனது போர்ப் பிரகடனத்தை துவக்கி விட்டது. நாளை வல்லரசாக மாறப்போகும் இந்தியாவின் எழுச்சிக்கு கட்டியம் கூறும் விதத்தில் தமுமுக பேரணி அமைந்தது.
பேரணி புறப்படத் தொடங்கியதும் பல்லாயிரக்கணக்கான உணர்வாளர்கள் புறப்படத் தொடங்கி விட்டார்கள் என்று மட்டுமா நினைக்கிறீர்கள்... இந்திய அரசியலை அசைத்துப் பார்க்கும் வண்ணம் புதிய அரசியல் அத்தியாயத்தை நோக்கி பயணமும் துவங்கி விட்டது என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு.
பொதுவாக பேரணிகள், ஊர்வலங்கள், புறப்படும் போது புழுதிகள் பறக்கும், தூசு பறக்கும். ஆனால் அங்கு பதவியும் பகட்டும் எங்களுக்கு தூசு என்பதை நிரூபிக்கும் விதமாக தன்னலமற்ற தமுமுக சேவைப் படையினரின் பேரணி அமைந்திருந்தது.
மொத்தத்தில் பேரணியின் தூசு பறக்கவில்லை. ஆனால் சமுதாயத்தில் விரவிக்கி டந்த மாசு பறந்தது, மறைந்தது.
லியோ டால்ஸ்டாய் சாலைக்கு முன்பாக உள்ள சிக்னலில் தொடங்கி பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. முதலில் தொண்டரணியினர்அணிவகுக்க, தமுமுக தலைமை நிர்வாகிகள், அகில இந்திய முஸ்லிம் தலைவர்கள், அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் என்ற அளவில் பேரணியின் வரிசை அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அன்னையர்களும் குழந்தைகளும் அணி வகுத்தனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக சேவைப் படையினர் அணிவகுத்து புறப்பட்டனர்.
அயராது, அலட்டாது அட்டகாசமாக புறப்பட்ட பேரணி பல மைல்கள் தூரத்துக்கு நீண்டது. பெருமெடுப்பிலான மக்கள் வெள்ளம் சிறிதும் களைப்பின்றி, அலுப் பின்றி அணிவகுத்து அலையடித்து மேடையை வந்தடைந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment